கோவை மாவட்டத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா தொற்று!! பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுகோள்!!

 -MMH 

கோவையில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்.

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 681ஆக உயர்ந்து உள்ளது.

கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 113 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 46 ஆயிரத்து 926 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி பலனின்றி உயிரிழந்தார்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 471 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட செய்தியாளர்கள்:

ராஜேந்திரன்

ஹனீப்

முகமது சாதிக் அலி

சுரேந்திர குமார்

அருண்குமார்.

Comments