கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் வழங்கினார்!

 

-MMH

             சென்னை.கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் வகையில் சென்னை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2021) தலைமைச் செயலகத்தில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் வகையில், சென்னை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000/- நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார். 

நோய்த்தொற்று காரணமாக மார்ச் 2020 முதல் நாளது தேதி வரை 27,31,945 நபர்கள் பாதிக்கப்பட்டு, 26,87,414 நபர்கள் குணமடைந்துள்ளனர், 36,549 நபர்கள் கரோனா நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

-பாலாஜி தங்கமாரியப்பன்  போரூர் சென்னை.

Comments