கோவையில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!!!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கோவையில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் O. M. A. சலாம் சாஹிப் அவர்கள் தலைமையில் கோவையில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி போத்தனூர் ரோடு பிஸி ஃபுட் ஹாலில் வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தின் அனைத்து ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உட்பட சமுதாய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இதுபோன்ற ஒற்றுமையான கூட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் கோவையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஜமாஅத்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து பொதுவான விஷயங்களில் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என கலந்துகொண்ட பலரும் கருத்து தெரிவித்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் O. M. A. சலாம் சாஹிப் அவர்கள் கூறும்பொழுது, தற்போது இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசானது தனது நிலைபாடான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் சமமாக மதிக்கப்படுவர் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாக உள்ளது.
நாட்டில் மாட்டின் பெயரால் மக்கள் அடித்துக் கொல்லப்படுவதும், ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தை முழங்காத காரணத்தைக் கூறி சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த குறிப்பாக இஸ்லாமிய மக்கள் அடித்து கொலை செய்யப்படுவதும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது நமது நாட்டின் மத சார்பற்ற தன்மைக்கும், ஜனநாயக ஆட்சிக்கு எதிராக பாரதிய ஜனதா அரசு செயல்படுவதாகவே உள்ளது. மேலும் வளர்ச்சி என்பது வெற்று கோஷமாகவே நமக்குத் தெரிகின்றது.
ஏனென்றால், நாட்டின் சிறு, குறு தொழில் முதல் மிகப்பெரிய நிறுவனங்கள் வரை மிகப் பெரும் நஷ்டங்களிலேயே இயங்குகின்றன. பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே இதுபோன்ற நிலைபாடுகள் மத்திய அரசின் மீது உள்ள நம்பிக்கையை அனைத்து தரப்பு மக்களிடத்திலும் இழந்து உள்ளதாகவே தெரிகின்றது.
எனவே இதுபோன்ற நிலைபாடுகளை மத்திய அரசு கைவிட்டு விட்டு நாட்டின் வளர்ச்சிக்காகவும் தேசத்தின் ஒற்றுமைக்காகவும், அனைத்து கட்சியினருடனும் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல் பாட்டினை கைவிடும்படியும் இத்தருணத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜனாப் ஏ. எஸ். இஸ்மாயில் மாநில பொதுச்செயலாளர் முஹைதீன் A. முகைதீன் அப்துல் காதர், மாநில பொருளாளர் T. M. இப்ராஹிம் பாதுஷா, மாநில செயற்குழு உறுப்பினர் M. முஹம்மது இஸ்மாயில், கோவை மண்டல தலைவர் A. அன்வர் உசேன் மற்றும் மண்டல செயலாளர் M. ஜெய்னுலாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக மாவட்ட A. அப்துல் ரஹ்மான் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் K. முஜிபுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினர். மாவட்ட செயலாளர் A. அப்துல் ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments