ஹெலிகாப்டர் விபத்து பற்றி அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! காவல்துறையினர் அறிவிப்பு !!

   -MMH 

    கடந்த 08-12-2021 அன்று நமது பாரத திருநாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி திரு. பிபின் ராவத் மற்றும் அவர்களுடன் சென்ற அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டனர். நாடே துயரமாக உள்ள இந்த சூழ்நிலையில்   "நான் தான் பாலா" என்ற முகநூல் கணக்கில் இந்த விபத்து பற்றியும் பாரத பிரதமர் அவர்களை தொடர்பு படுத்தியும் மிகவும் அநாகரிகமான முறையில் செய்தி மற்றும்  கார்டூன்  வெளியிட்டிருந்தனர். இதை  பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினர் கண்டித்து அவர்களுடைய எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் "நான் தான் பாலா"என்ற முகநூல் கணக்கில் செய்திகளை வெளியிட்ட நபர் மீது சாதி, மதம், மொழி, இனம் ,சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டி விடுதல், அமைதியை குலைக்க தூண்டும்  வகையிலும் மற்றும் ,இரு வேறு வகுப்புகளுக்கு இடையே தீய எண்ணத்தை உருவாக்கும் உரைகளை வெளியிட்டது என மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சரவணம்பட்டி  காவல் நிலைய ஆய்வாளர் அவர்களால் புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது .

எனவே இந்த விபத்து தொடர்பான அவதூறு செய்திகளை யாரும்  வெளியிட வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments