பரபரப்பாக இருக்கும் பஸ் நிலையமா இது? தூங்குபவர்களின் கூடாரமாய் மாறியுள்ள பஸ் நிலையம்! !
எப்போதும் பரபரப்பாக உள்ள மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், நகராட்சி கடைகள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டதால், வழிப்போக்கர்கள், குடிமகன்கள், கடைகள் முன் பகலிலேயே படுத்து துாங்குகின்றனர்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் ஏராளமான பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றன. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இவர்கள் பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள, நகராட்சி கடைகளில், பொருட்களை வாங்குவர். இதனால் பஸ் ஸ்டாண்ட் கடைகளில் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படும்.இந்நிலையில், நகராட்சி கடைகளை, வாடகைக்கு எடுத்த கடை வியாபாரிகள், வாடகை உயர்வு என, இரண்டரை ஆண்டாக நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்தனர். கடை வியாபாரிகளுக்கு, நகராட்சி நிர்வாகம் பலமுறை, வாடகை செலுத்தும்படி நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் கடை வியாபாரிகள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர். பஸ் ஸ்டாண்டில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை, நகராட்சி நிர்வாகம் பூட்டி 'சீல்' வைத்தது.நகராட்சி கடைகள் திறந்து இருக்கும்போது, பஸ் ஸ்டாண்ட் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.கடைகள் அடைத்திருப்பதால், வழிப்போக்கர்கள், குடிமகன்கள் பகலிலேயே, கடைகள் முன் படுத்து துாங்குகின்றனர். பரபரப்பான பஸ் ஸ்டாண்ட் கடைகள், இன்று குடிமகன்களின் துாங்கும் மடமாக மாறியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன் .
Comments