ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

   -MMH 

    கோவையில் செயல்பட்டு வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று மையத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையில் ஏராளமான விவசாயிகள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள் விதைகளை பாலித்தீன் கவரில் வைத்து, தங்களது கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு கோஷமிட்டனர். இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- கோவையில் விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகம் 1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 

அந்த அலுவலகத்தை சென்னைக்கு மாற்றினால் விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே விதை சான்று அலுவலகத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது. இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments