வால்பாறை பகுதியில் பயணிகள் ஒதுங்குவதற்கு நிழல் குடை, நிழல் கூடங்கள் இல்லாமல் காத்துக்கிடக்கும் அவலம்! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் பொதுமக்கள் வெளியூர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்கு பேருந்து பயணத்தை நம்பி உள்ளனர் இந்த சூழ்நிலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள், பயணிகள் ,பள்ளி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் ஒதுங்குவதற்கு கூட நிலக்கொடை மற்றும் நிழற்குடைகள் இல்லாமல் பொதுவெளியில் பேருந்துக்காக காத்து கிடக்கின்றனர்.

வெயில் மற்றும் மழை காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று ஒதுங்க நினைத்தால் அவர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் கடை உரிமையாளர்கள்  அதற்கு  அனுமதிப்பதில்லை .

பழைய வால்பாறை அரசு பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர் மேலும் வாகனங்களை நிறுத்த போதுமான வாகன நிறுத்த வசதிகளுடன்கூடிய பேருந்து நிலையம் அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பொதுமக்கள் கருதுகின்றனர்.

எனவே இந்தத் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள் 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-S.ராஜேந்திரன், திவ்ய குமார் வால்பாறை.

Comments