போக்சோ சட்டத்தில் ஜாமினில் வந்த குற்றவாளிக்கு கத்திக்குத்து..!!

   -MMH 

   கோவை மாவட்டம் காரமடை மருதூர் பகுதியில் போக்சோ சட்டத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த குற்றவாளியை கத்தியால் குத்திய மர்ம நபர்.

மருதூரில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்து நடத்தி வருபவர் பிரின்ஸ் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காரமடை போலீசார் அவரை கைது செய்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர் கடந்த 4 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த அவர் 29ம் தேதி இரவு தனது டிபார்ட்மெண்ட் ஸ்டோரை அடைத்து விட்டு வெளியே நின்றிருந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் வெகு சாதாரணமாக வந்து அவரை கத்தியால் குத்தினார் இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் . இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-முகம்மது சாதிக் அலி.

Comments