சேரன்மாநகர் நேதாஜி நகரில் பயன்பாடின்றி பராமரிப்பில்லாமல் கிடக்கும் பூங்கா..!! மழைநீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம்!!

   -MMH 

    கோவை மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சேரன்மாநகர் அருகாமையில் உள்ள நேதாஜி நகர் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் விளையாட்டு பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது இப்பூங்காவில் காலையிலும் மாலையிலும் அப்பகுதி மக்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வது வழக்கம் சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்த பேய்த கன மழை காரணமாக தற்போது  பூங்கா முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது  அது மட்டுமின்றி ஆங்காங்கே தண்ணீருக்குள் குப்பைகளும் தென்படுகின்றது இதனால் அழுகிய துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் தற்போது கொசு கடிப்பதால் ஏற்படும் டெங்கு காய்ச்சல்  அதிகமாக பரவி வரும் சூழலில் இது போன்று தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி அதனால் குழந்தைகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட நலக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தேங்கியுள்ள நீரை அகற்றி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.

-சாதிக் அலி.

Comments