கோவையில் இருந்து கேரளாவுக்கு மீண்டும் பஸ்!!

    -MMH 

  கொரோனா பரவல் காரணமாக கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் நேற்று காலை முதல் கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், கொச்சி, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் கேரள அரசு பஸ்களும், இயக்கப்பட்டன.

கோவையில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் செல்வோர் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிகளைப் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதையடுத்து பயணிகள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தனர். முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

கோவையில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால், இரு மாநிலத்தவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments