கோவையில் நடமாடும் டீசல் பங்க் அறிமுகம்!!

   -MMH 

   சின்னவேடம்பட்டியில் சேரன் மெஷின்ஸ் நிறுவன வளாகத்தில் டீசல் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு, நடமாடும் டீசல் பங்க் ஒன்றை சின்னவேடம்பட்டியை சேர்ந்த 7 பேர், ஒரு ஸ்டார்ட் அப் முயற்சியாக இதை துவக்கியுள்ளனர். 

இந்த நடமாடும் டீசல் லாரியை, சேரன் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மோகன்குமார் துவக்கி வைத்தார். எம்.எம். கியர்ஸ் நிர்வாக இயக்குனர் மயில்சாமி, விற்பனையை துவக்கி வைத்தார். தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கு டீசல் எடுத்துச் செல்வது ஒரு கடினமான வேலையாகவே இருந்து வருகிறது. தேவையான தொழிற்சாலைகளுக்கு நேரடியாக டீசல் சப்ளை செய்ய, டீசல் பங்க் வசதியுடன் உள்ள ஒரு லாரியை அறிமுகம் செய்துள்ளோம். குறைந்தபட்சம் 500 லிட்டர் முதல் வினியோகிக்கிறோம். நகருக்குள் 30 கி.மீ.,சுற்றளவில் விநியோகம் இருக்கும். 3000 லிட்டருக்கும் மேல் தேவையிருப்பின், 50 கி.மீ.,துாரத்திற்கும் அதிகமான இடத்திற்கும் சப்ளை செய்கிறோம் என்று அந்த நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் தெரிவித்தார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments