மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி! போத்தனூர் ஸ்ரீராம் நகரில் உதவி ஆணையர் பங்கேற்பு!

 -MMH 

கோவை மாவட்டம் போத்தனூரில் உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு குன்னூர் ராணுவ விமான பயிற்சிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பயணம் மேற்கொண்ட படைகளின் தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மற்றும் இன்னும் 13 ராணுவ வீரர்கள் துரதிஸ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் உடல் கருகி உயிரிழந்த கோர சம்பவம் நிறைவேறியது. 

இச் சம்பவம் உலகையே அதிர்ச்சியில் உறைய செய்தது, இந்திய மக்கள் அவரின் வீரத்தை போற்றும் விதமாக பல்வேறு இடங்களில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அதுபோல் நேற்று மாலை போத்தனூர் ஸ்ரீராம் நகரில் போத்தனூர் உதவி ஆணையர் அவர்களின் தலைமையில்  பிபின் ராவத் அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

-தமிழக தலைமை நிருபர் ஈசா.

Comments