கோவைமாநகர காவல் மூலமாக விபத்தில்லா கோவை உருவாக்க முயற்ச்சி!!
விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப., அவர்கள் "EEE"(Enforcement, Education,Engineering) திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், கோவை மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, காவல் ஆணையர் அவர்கள், முக்கிய சந்திப்பு பகுதிகளை தேர்ந்தெடுத்து "போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு" (Zero violation Junction)என அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.
கோவை மாநகர போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் திரு.S.R. செந்தில்குமார், அவர்களின் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர், சிந்தாமணி சந்திப்பு பகுதியை போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு" (Zero violation Junction) என தேர்ந்தெடுக்கப்பட்டு விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டு விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிந்தாமணி சந்திப்புப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து கொண்டு தலைக்கவசம் அணியாதவர்கள், சிக்னல்களில் எல்லைக் கோட்டை தாண்டி நிறுத்தும் வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் என பல்வேறு விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு, வாகன விபத்து எவ்வாறு நடை பெறுகிறது என்பது பற்றியும் அவ்வாறு வாகன விபத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சாலை விதிகள் பற்றிய துண்டுப்பிரசுரம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி NSS மாணவர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் மாநகர் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் ஏற்படுத்தப்பட்டு,வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments