கோவையில் சிறுமி கடத்தல் கோவையில் பள்ளிச்சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, டியூசன் சொல்லித்தந்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்!

 

-MMH

       சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் மணிமாறன், 40. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர், இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன், 2018ம் ஆண்டு வரை சேலத்தில் இருந்துள்ளார். அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தவர், வெவ்வேறு புகார்களின் காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவர், கோவை சரவணம்பட்டி டியூசன் சென்டரில் கணிதம், கணிப்பொறி, நடனம் மற்றும் மேஜிக் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அப்போது தங்கியிருந்த வீட்டின் அருகே, 12ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் அறிமுகம் ஏற்பட்டது.சிறுமியை மயக்கி, வேறு ஊருக்கு கடத்திச் சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டியூசன் சொல்லித்தந்த ஆசிரியர் மணிமாறனை போலீசார் தேடி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments