பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்க திட்டம்..!!

   -MMH 

  பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படுவதற்கான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு கரும்பு உட்பட 21 பொருள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு  ஜனவரி 3ம் தேதி முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது தற்போது கூட்டுறவு சிறப்பு பதிவாளர் அவர்களின் சுற்றறிக்கையில் பொங்கல் பரிசு தொகுப்பு டன் ரொக்க தொகை வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்று ஒரு வாசகம் அவர் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்று இருப்பதினால் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரொக்கத் தொகை வழங்குவதும் உறுதியாகி உள்ளதாக தெரிகிறது. கிட்டத்தட்ட 2 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 88 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக இருந்த சூழ்நிலையில் தற்போது உறக்கமும் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

-சாதிக் அலி.


Comments