முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் கட்சி கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது!

 

-MMH

    பாரதிய ஜனதா கட்சி மாநகர மாவட்ட செல்வபுரம் 76வது டிவிசன் மண்டல் சார்பாக  முன்னாள் பிரதமர் A.B வாஜ்பாய் அவர்களின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெலுங்குபாளையம் ரவுண்டானா பகுதியில் மண்டலத் தலைவர் டி.வி.குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் T.கார்த்திக் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் மாவட்ட தலைவர் ஆர்.நந்தகுமார் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் கோவையில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம், சந்திரமோகன், பொதுச் செயலாளர்  என்.கணேசன், தினேஷ்குமார் மாவட்ட துணைத்தலைவர் மதன்,முரளி,தாமு சரண்யாரவி, துணைத்தலைவர் தலைவர்கள்  எஸ்.முனீஸ்வரன், எஸ்.மணிகண்டன், செயலாளர்கள் எம்.ஏ.மணிவண்ணன், ரமேஷ்குமார் என பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments