உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்தில் அதிமுகவினர் தாய் கழகமான திமுகவில் இணைந்தனர்!!

    -MMH 

திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்தில் குடிமங்கலம் அதிமுக ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் மற்றும்  கோபால்ராஜ் (கொள்ளுபாளையம் கிளைச் செயலாளர்) முத்து (குடிமங்கலம் வார்டு உறுப்பினர், கிளைச் செயலாளர்) வேலுச்சாமி (முத்துசமுத்திரம் கிளை செயலாளர்) விஷ்ணு (குடிமங்கலம் ஆதிதிராவிடர் காலனி கிளை செயலாளர்) சுரேஷ் (நால்ரோடு) சின்னசாமி (பத்திரகாளி புதூர் கிளைச் செயலாளர்)

ஆனந்தன் (கொள்ளுபாளையம் ஆதிதிராவிடர் காலணி கிளைச் செயலாளர்) நாகராஜ் (கொள்ளுபாளையம்) குப்புசாமி (குடிமங்கலம் ஆதிதிராவிடர் கிளை) ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் தலைமையில் தாய் கழகமான திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் பொன்.முருகேசன், சியாம்,கிரி மாவட்ட

பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முபாரக்அலி, ராஜமாணிக்கம், கதிரேசன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் குடிமங்கலம் ஒன்றிய குழு தலைவர் முரளி ஒன்றியக்குழு துணைத் தலைவர் புஷ்பராஜ் குடிமங்கலம் ஊராட்சித் தலைவர் முருகவேல் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி, உடுமலை.

Comments