வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!!

 -MMH 

கோவை வேளாண் பல்கலையின் சார்பாக பேக்கரி பொருட்கள் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வேளாண் பல்கலையில் வரும் ஜன.,4 மற்றும் 5ம் தேதிகளில், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், இரு நாட்கள் பயிற்சி நடக்க உள்ளது. 

பயிற்சியில் ரொட்டி வகைகள், கேக், பிஸ்கட், சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிப்பது குறித்த தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், ரூ.1,500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., கட்டணத்தை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 0422 - 6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் பல்கலைக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments