கோவையில் அனைத்து கட்சி கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு!!

    -MMH 

    தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் அண்ணன் கு. ராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில்  அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், வணிகர் சங்கங்கள், ஆலோசனை கூட்டம் நேற்று 20.12.2021 காந்திபுரம் பெரியார் படிப்பக அலுவலகத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் டு திருச்செந்தூர் ரயில் சேவை தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் மாபெரும் அடையாளப் போராட்டம் நடத்துவது என  முடிவு ஆலோசனை செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருகின்ற 27.12.2021 திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றுஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவைமாவட்டதுனைசெயலாளர் முஹம்மது ஹனீப் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஷபீக் அலி, தமுமுக ஆசிக் ஷாஹுல் ,மமக பஷீர் பாரூக். காங்கிரஸ் கருப்பசாமி இருகூர் சுப்ரமணியம். மதிமுக சேதுபதி சற்குணம். விசிக கலையரசன் இலக்கியன், சிபிஐ சன்முக சுந்தரம், எஸ்டீபிஐ ரபீக் ஷாஜஹான், ஜமாத்தே இஸ்லாம் ரஹ்மான் ஹக்கீம், ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments