நாளைய வரலாறு செய்தியின் எதிரொலியாகவும் மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையாலும் பொள்ளாச்சி சீனிவாசபுரம் தரைமட்ட பாலத்திற்கு தீர்வு!!

   -MMH 

   'பொள்ளாச்சி ரயில்வே தரை மட்ட பாலம் சேதமானதால் வாகன ஓட்டிகள் அவதி! - சரி செய்ய தவறும் பட்சத்தில் ஆர்ப்பாட்டம் - மக்கள் நீதி மய்யம் எச்சரிக்கை!!'

என்ற தலைப்பில் கடந்த 10ஆம் தேதி விரிவான தகவலுடன் செய்தி வெளியிட்டிருந்தோம்.

நமது செய்தியின் எதிரொலியாக நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்த சீனிவாசபுரம் ரயில்வே பாலம்  தரைமட்ட சாலையை சீரமைக்கும் பணி நேற்று மின்னல் வேகத்தில் நடைபெற்றது. 

சாலை சீரமைக்கும் பணியின்போது சரியான முறையில் சீரமைக்க படுகிறதா என்று தெரிந்துகொள்ள மக்கள் நீதி மய்யத்தின் வால்பாறை தொகுதி கோவை மாவட்ட துணை செயலாளர் அம்பராம்பாளையம் கமல் பாவா நேரில் சென்று  பார்வையிட்டார்.

பின்பு நமக்கு அளித்த பேட்டியில் கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற சொல்லுக்கேற்ப கேட்காமலும் தட்டாமலும் எதுவும் நடக்காது போல இந்த வழித்தடத்தில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமப்பட்டு வந்த அவல நிலையை கண்டு யாரும் முன்வந்து கேட்காத சூழ்நிலையை அறிந்து மக்கள் நீதி மய்யத்தின் கோவை மாவட்ட செயலாளர் பாபு பிரசாத்தின் பார்வைக்கு கொண்டு சென்று அவரின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டு தீர்வு கண்டுள்ளோம் அந்தவகையில் மகிழ்ச்சி எங்களின் செயல்பாடு ஒரு போதும் விளம்பரத்திற்காக அல்ல மக்கள் நலனுக்காக மக்களுக்காக கடந்த நாட்களில் மக்களோடு நின்று குரல் கொடுத்தோம் அந்த குரலின் சக்தியை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து கொடுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாகவும் மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சீனிவாசபுரம் தரைமட்ட பாலத்தின் சாலையை சீரமைக்க முன்னோடியாக இருந்த அம்பராம்பாளையம் கமல் பாவாவை இப்பகுதியிலுள்ள பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக துணைத் தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments