கோவை காளப்பட்டியில் திமுக இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை..!!! உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு..!!

 -MMH 

கோவையில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  2000 கும் மேற்பட்டவர்கள் திமுக இளைஞரணி உறுப்பினர்களாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்பு தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள்; சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன்.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சரவையிலுள்ள பலரும் கூட அவ்வப்போது பொது வெளியில் கருத்து கூறி வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் பையா கவுண்டர், நா. கார்த்திக், குறிச்சி பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் ,மேலும் மேலும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

-சாதிக் அலி.

Comments