வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்! காவல்துறையினர் கைது நடவடிக்கை! !

   -MMH 

   கோவை: பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பல்கலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அரியர் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால், தோல்வி அடைந்ததாக பல்கலை சார்பில், அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் உள்ளிருப்பு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட கலெக்டரை சந்தித்து, பல்கலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு தீர்வு வழங்க மனு அளித்தனர். இதையடுத்து, நேற்று இரண்டாம் கட்டமாக மாணவர்களுடன் பல்கலை நிர்வாகம் சார்பில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், மாணவர்கள் பல்கலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மாணவர்களிடம் நடத்திய பேச்சு நடத்தியும் பலனளிக்காததால், போலீசார் மாணவர்களை கைது செய்தனர். இதை கண்டித்து, மாணவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவத்தையடுத்து, இந்திய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள், 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மாணவர்களை விடுவித்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன் .

Comments