கலவரக் காதல்..!!!முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி...!!

   -MMH 

   கேரளா மாநிலம் திருவனந்தபுரம்  பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ஒரு மசாஜ் சென்டரில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் மீனம்பாக்கம்தை சேர்ந்த ஜெயந்தி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அங்கே இருவரும் திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த ஜூலை மாதம் ராகேஷ் தனது சொந்த ஊர் திரும்பி உள்ளார்,  அதேபோல் ஜெயந்தியும் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். ராகேஷ் தன்னை திருமணம் செய்து செய்துகொள்வார் என்று எண்ணத்தில் இருந்து ஜெயந்தி ராகேஷை தொடர்பு கொள்கையில் ராக்கேஷ் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறி தனது திருமண போட்டோக்களை ஜெயந்தியின் வாட்ஸ்அப் க்கு அனுப்பி உள்ளார் இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த ஜெயந்தி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடவே ராகேஷ் ஜெயந்தியை சமாதனம் செய்ய பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு வரச் சொல்லியுள்ளார் . இருவரும் அங்கு  சந்தித்த போது ஜெயந்தி தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி தைப்பற்றி ராகேஷிடம் கேட்டு கடுமையாக சாடியுள்ளார் , மேலும் தன்னையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதை மறுத்த ராகேஷ் ஜெயந்தியின் செல்போனை வாங்கி தன்னுடன் உள்ள புகைப்படத்தை அளிக்க முற்படவே ஆத்திரமடைந்த ஜெயந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் மேலும் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராகேஷன் மீது வீசியுள்ளார் இதனால் பல இடத்தில் காயம்பட்ட ராகேஷ் துடிதுடிக்க அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் இதைப் பற்றி தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு இதைப்பற்றி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-சாதிக் அலி

Comments