கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு பையா கவுண்டர் அவர்களின் பிறந்தநாள் விழா!!

     -MMH 

கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திரு பையா (எ) கிருஷ்ணன் அவர்களின் 68 வது பிறந்தநாள் விழா சரவணம்பட்டி திமு கழக மேற்கு மாவட்ட  அலுவலகத்தில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் தலைவன் என்று போற்றப்படும் திரு பையா கவுண்டர் அவர்கள் தன்னலமில்லா மக்கள் பணியில் சிறந்தவர் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றவர் . 

இவ்விழாவில் வட்ட, பகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறி அண்ணன் அவர்களின் ஆசியைப் பெற்று இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடினர். நிகழ்ச்சியின் அடுத்தபடியாக கோவையின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட மதிப்புக்குரிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை சந்தித்து அவரின் வாழ்த்துக்களையும் பெற்றார்.

-சாதிக் அலி.

Comments