உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் !!

   -MMH 
   திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக இளைஞரணி செயலாளர் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் தலைமையில் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கதிர்வேல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 
இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
-துல்கர்னி உடுமலை.

Comments