சேரன் மாநகரில் மின்தடை நாளில் கம்பத்தில் ஊழியர் வேலை செய்யும் போது மின்சாரம் பாய்ந்த பரிதாபம்..!!

   -MMH 

    கோவை மேற்கு மாவட்டம் சேரன்மாநகர் பகுதியில் நேற்று மின்தடை நாள் ஆகவே அப்பகுதியில் மின்கம்பம் பராமரிப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது , பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றி புதிய மின் கம்பிகள் பொருத்தப்பட்டு கொண்டிருந்தபொழுது  வேலை செய்து கொண்டிருந்த மின்சாரத் துறையின் ஒப்பந்த ஊழியர் கார்த்திக் ( வயது 34) திடீரென்று தூக்கி வீசப்பட்டு  கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்களும் பொதுமக்களும் ஓடிச்சென்று அவரை உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து முதல் உதவி செய்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  

மின்தடையின் போது எப்படி மின்சாரம் பாய்ந்தது என்று ஆராய்ந்த பொழுது மின் பழுது செய்து கொண்டிருந்த இடத்தின் பக்கத்தில் இருந்த பேக்கரி ஒன்றில் ஓடிக்கொண்டிருந்த ஜென்செட் ஜெனரேட்டர் மூலம் எதிர்பாராத விதமாக கரண்ட் லீக்கேஜ் காரணமாக மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது . இதைப்பற்றி ஆராய வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

-சாதிக் அலி.

Comments