இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனத்தின் கோவை கிளைக்கு புதிய கட்டிட பணிகள் துவக்கம்!!

    -MMH 

   கோவை: இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனத்தின் கோவை கிளைக்கு புதிய கட்டிட பணிகள் துவக்கம் என அதன் தலைவர் சி.எஸ்.நாகேந்திர ராவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனம் கம்பெனி செயலர்களை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு முன்னணி கல்வி நிறுவனம். பாராளுமன்றத்தில் 1980 ம் ஆண்டில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு துவங்கப்பட்ட இது மத்திய அரசின் நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஐசிஎஸ்ஐ , புதுடில்லி , மும்பை , கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மண்டலங்களைக் கொண்டது.நாடு முழுவதும் 72 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது . இந்த கிளைகள் வாயிலாக கம்பெனி செயலாளர்கள் கல்வியளித்து வருகிறது . கோவையிலும் இதன் கிளை உள்ளது.பாரதியார் பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு கம்பெனி செயலர்களை உருவாக்க கல்வியளித்து வருகிறது . தற்போது கோவை கிளையின் புதிய அலுவலகம் காளப்பட்டி பகுதியில் கட்டுமான பணிகளை துவக்க இன்று அடிக்கல் நாட்டியுள்ளது . இந்திய கம்பெனி செயலர்கள் நிறுவனத்தின் தலைவர் திரு. சி.எஸ்.நாகேந்திர ராவ் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , கோவை கிளையின் புதிய அலுவலக கட்டடம் கட்ட பணிகள் இன்று முதல் பணிகள் துவக்கப்படுகின்றன . கோவை கிளையின் கீழ் கோவை , திருப்புர் , ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க இந்த கட்டடம் பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய கவுன்சில் உறுப்பினர் நரசிம்ஹான், எஸ்.ஐ.ஆர்.சி தலைவர் பாலசுப்பிரமணியன், கோவையின் அத்தியாய தலைவர் துரைசாமி,செயலாளர் விஜய் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments