அபாய நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை!!

   -MMH 

   பொள்ளாச்சி ஆனைமலை மாரப்பகவுண்டன்புதூர் அடுத்த எம்.ஜி.ஆர் புதூர் மளிகைக் கடை அருகே உள்ள மிகவும் பழமையான மின் கம்பம் பல  மாதங்களாக  சேதமடைந்த நிலையில் உள்ளது.

இது குறித்து புகார் தெரிவித்தும் மின் வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள் இப்பகுதி பொதுமக்கள். 

அதேசமயம் எந்த நேரம் வேண்டுமானாலும்  கீழே விழும் நிலையில் உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக விரிசல் ஏற்பட்டு  கம்பத்திலிருந்து  காங்கிரட் கற்கள் கீழே விழ தொடங்கியுள்ளன  மின்கம்பம் கீழே விழும் பட்சத்தில் இப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் மேலும் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது இதனால் மின் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என்கிறார்கள் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள்.

-M.சுரேஷ்குமார்.

Comments