கோதவாடியில் குளம் நிரம்பியதை பார்வையிட வந்த எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு..!!

   -MMH 

   கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோதவாடி பகுதியில் 152 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. கடந்த நவம்பர் 30-ஆம் தேதி பரம்பிக்குளம் ஆழியார் பாசன உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணத்தினால் நேற்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு குளம் நிரம்பியது. இதை கொண்டாடும் விதமாக அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து மலர்தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைப் பார்வையிட வந்த பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏ திரு ஜெயராமன் அவர்கள் குளத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுகவினர் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் திமுக தொண்டர்களுக்குப் அதிமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அதிமுகவினர் எம்எல்ஏ ஜெயராமனை கூட்டத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் செருப்பு வீசியதால் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

-சாதிக் அலி.

Comments