மழை நீர் வடிகால் அமைக்க பள்ளம்!! பல நாட்களாக பணி கிடப்பு!!

 -MMH 

பிரதான சாலையில் மழை நீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டி, பல நாட்களாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஆதம்பாக்கத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதியில் பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அப்பகுதி மக்களின் பிரதான போக்குவரத்து சாலையாக புழுதிவாக்கம் - ஆதம்பாக்கம் பாலாஜி நகர் பிரதான சாலை விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த சாலையில் பயணிக்கின்றன. மவுன்ட் - வேளச்சேரி உள்வட்ட சாலையை கடந்து செல்லும் பாலாஜி நகர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத் துறையால் பள்ளம் தோண்டப்பட்டது.

அப்பணி பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டதால், பிரதான சாலையில் காலை, மாலை இருவேளையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் அப்பணியை விரைந்து முடித்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கார்த்திகேயன், தண்டையார் பேட்டை.

Comments