பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!

   -MMH 

   கோவை பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பெண்கள் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பிபி ஜி கல்லூரியில் நடைபெற்றது. 

கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி கல்லூரியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை  எவ்வாறு கையாள்வது என்பது குறித்த காவல்துறையினரின் அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பி.பி.ஜி கல்லூரி குழும தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல் ஆணையர் பிரதீப் குமார்,கோவை மாவட்ட காவல் துணை ஆணையர்  உமா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். 

இந்நிலையில்  மாணவர்கள் இடையே  பேசிய உமா,பெண் குழந்தைகள் குறிப்பாக மாணவிகள் செல் போனை பயன்படுத்தும்போது பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார். காவல்துறையினரின் உதவியை கேட்க மாணவிகள் ஒருபோதும்  தயங்க வேண்டாம் என்றும் அவர் அறிவுரை வழங்கினார். 

இதையடுத்து பேசிய காவல் ஆணையர் பிரதீப் குமார் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதே தங்களது முதல் கடமை எனக் கூறினார். பெண்களை காப்பதற்கு இன்னும் அதிகமான சட்டப்பணிகளை நாம் செய்ய வேண்டியுள்ளதாக கூறினார். மேலும்  எதிராக குற்றங்கள் நிகழ்த்தப்படும்போது அதனை காவல்துறையனரின் கவனத்திற்கு கட்டாயம் கொண்ட வரக்கூடிய மனோதைரியத்தை மாணவிகள் வளர்த்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சயில் பிபிஜி கல்வி குழும தாளாளர் சாந்தி தங்கவேலு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments