சிங்கம்புணரி - மேலூர் இடையே தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கட்டண உயர்வா? பொதுமக்கள் கொதிப்பு!

   சிங்கம்புணரி - மேலூர் இடையே பயணக்கட்டணமாக மாநில அரசால் ரூ.20 நிர்ணயிக்கப்பட்டு, அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் ரூபாய் இருபது மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.

இன்று மதியம் 1.30 மணிக்கு சிங்கம்புணரியில் இருந்து மதுரை செல்லும் PRP எனும் தனியார் பேருந்தில் (எண்: TN63Q  2299) சிங்கம்புணரியில் இருந்து மேலூருக்கு, மேற்சொன்ன பேருந்தின் நடத்துனரால் (அவர், தனது பெயர் ரமேஷ் என்று கூறியுள்ளார்) 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

நடத்துனரிடம், ஏன் இந்த கட்டண உயர்வு என்று பயணிகள் கேள்வி எழுப்பியபோது, "அரசு அலுவலர்களுக்கு லட்சக்கணக்கில் நாங்கள் லஞ்சம் தர வேண்டியுள்ளது. உங்களால் எங்களை எதுவும் செய்ய முடியாது" என்று ஆணவத்துடன் பதிலளித்துள்ளார்.

இன்றுவரை, அரசுப் பேருந்துகளிலும் மற்ற தனியார் பேருந்துகளிலும் சிங்கம்புணரி - மேலூர் இடையே இருபது ரூபாய் மட்டுமே பயண கட்டணமாக வசூலிக்கப்படும் வரும் நிலையில், இந்தத் தனியார் பேருந்தில் மட்டும் ஐந்து ரூபாய் அதிகமாக பயண கட்டணம் வசூலிக்க, அனுமதி தரப்பட்டுள்ளதா? என்று பொதுமக்கள் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், இன்று தந்துள்ள பயணச் சீட்டில் பிழையான தேதி மற்றும் நேரம் அச்சாகியுள்ளதும் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.

- சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு!

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments