கொரோனா வைரஸை குணப்படுத்த ஒரு "சூயிங்கம்" போதும்...!!! அசத்தல் கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகள்..!!
விரைவில் தயாராக போகிறதாம் கொரோனவை குணப்படுத்தும் பபுள்கம் மருந்து. அமெரிக்கா பென்சில்வேனியா யூனிவர்சிட்டி டாக்டர் ஹென்றி டேனியல் அவரது தலைமையிலான குழு கொரோனா வைரஸை குணப்படுத்தும் பபுள்கம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மீட்டாயா என்னும் தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் புரத சத்து உமிழ் நீரால் பரப்பப்படும் கொரோணவை தடுக்கும் ஆற்றல் பெற்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோ டோன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவக்கூடும் அதை தடுக்கும் விதமாக இந்த தாவரத்தில் இருக்கும் A2V என்ற புரதசத்து கொரோனா பரவலை தடுக்கும் வல்லமை பெற்றது என்பது கொரோனா கிருமியில் செலுத்தி வெற்றி கண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இனி இந்தப் புரத சத்தை கொரோனா பாதித்த நபருக்கு கொடுத்து எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று உறுதியான பிறகு இந்த சூயிங்கம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது மட்டும் வெற்றியடைந்து வெளியே வந்துவிட்டால் சூயிங்கம் மென்று கொண்டே கொரோனாவை வென்று விடலாம் என்று உறுதிபட தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
-சாதிக் அலி.
Comments