அரசு நெல் கொள்முதல் நிலையம் முன்னாள் எம் எல் எ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!!
திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கல்லாபுரம் மற்றும் எலையமுத்தூர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் உத்தரவின்பேரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ex.MLA அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி பழனிச்சாமி ஒன்றிய கவுன்சிலர் தங்கமணி ஜெயபிரகாஷ், ஆத்மா வேளாண் குழு தலைவர் கதிரேசன் மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-துல்கர்னி உடுமலை.
Comments