கோவை மாநகர காவல் ஆணையர் சோதனைச் சாவடியில் ஆய்வு!!

   -MMH 

   கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார்,இ.கா.ப., அவர்கள் சக்தி சாலை, சரவணம்பட்டி சோதனைச்சாவடி மற்றும் அவிநாசி சாலை, சின்னியம்பாளையம் சோதனைச் சாவடியில் ஆய்வு செய்து அதிநவீன கண்காணிப்பு கேமரா (ANPR camera) பொருத்தவும், சோதனைச்சாவடி தூய்மையாக வைக்கவும், பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை பராமரிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு வழக்குப் பதிவு செய்வதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார். 

அதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அவர்கள், சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரை வழங்கினார்!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments