கல்லூரி மாணவர் தற்கொலை காரணம் என்ன?
ரயில்வே தண்டவாளத்தில் படுத்து கல்லூரி மாணவர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
கோவையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை போத்தனூர்-இருகூர் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து நேற்று நள்ளிரவு 12. 30 மணியளவில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் அவர் தலை சிதறி பலியானார். இது குறித்து ரயில் லோகோ பைலட் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார் தற்கொலை செய்த நபர் யார்? என்பது குறித்து விசாரித்தனர்.
மேலும், உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் இபி காலனியை சேர்ந்த இளங்கோராயன் என்பவரின் மகன் ஆண்டோ புகழ்ராயன் என்பது தெரியவந்தது.
இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். உடனே இது குறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். ஆண்டோ புகழ்ராயன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விவரம் தெரியவரவில்லை.
இருப்பினும் காதல் தோல்வியா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் படுத்து கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.
Comments