அரசு மருத்துவமனையை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மாவட்ட ஆட்சியர் வினீத்!!

    -MMH 

மருத்துவர்களுக்கு கடும் எச்சரிக்கை:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் 50 லட்சம் மதிப்பில் கட்டிட பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று பூமி பூஜை மேற்கொள்ள வருகை தருவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் வினீத் அவர்கள் வருகைதந்து மருத்துவமனையில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்பதாக இல்லை மேலும் மருத்துவமனைகளில் லேப் மற்றும் படுக்கை வசதிகளையும் பார்வையிட்ட அவர் தடுப்பு நடவடிக்கை போதிய அளவில்இல்லாமல் அலட்சியமாக இருப்பதைக் கண்டு மருத்துவர்களை கடுமையாக எச்சரிக்கை விடுத்து மக்கள் பணியில் தொய்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம் நடைபெற்றது.

-துல்கர்னி, உடுமலை.

Comments