குதிரையை கருணை கொலை செய்ய கோரி மனு!!

   -MMH 

   கோவை கே.என்.ஜி.,புதூர் கே.வி.எம்., மண்டபம் அருகில் குதிரை ஒன்று உடல் நிலை சரியில்லாத நிலையில் விழுந்து இருந்தது. இதைக்கண்ட கோவையை சேர்ந்த விலங்குகள் மீட்பு பணியாளர் விவேக் குதிரைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் குதிரையின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் கருணைக்கொலை செய்ய கால்நடை  மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இதன்படி விலங்குகள் மீட்பு பணியாளர் விவேக், குதிரையின் உடல் நிலை குறித்தும் குதிரையை கருணைக்கொலை செய்ய உத்தரவிட்டு, நல்லடக்கம் செய்ய உதவ வேண்டும்' என கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments