பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து தப்பிக்க நம்பர் பிளேட்டை மாற்றி நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!!

 -MMH

கீழ மேடு பகுதியில் கார் நம்பர் பிளேட்டை மாற்றி நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது காவல்துறையினர் விசாரணை.

பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் வயது52. இவரது மகேந்திரா சைலோ கார் நேற்று மதியம் நோ பார்க்கிங்கில் நின்று கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளார். ஆகவே கார் நம்பர் பிளேட்டை வைத்து தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து விசாரித்த போது, அந்தக் கார் திருப்பூரை சேர்ந்த வேறு ஒருவருடையது என்பது தெரியவந்தது. 

நோ பார்க்கிங்கில் இருந்து காரை எடுக்க வந்த கணேசனிடம் இதைப் பற்றி விசாரிக்க அவர் நிதி நிறுவனத்திடம் இருந்து தப்பித்துக்கொள்ள தன்னுடைய பழைய கார் நம்பர் பிளேட்டை பயன்படுத்தியதாக கூறியுள்ளார். அந்த பழைய காரும் நிதி நிறுவனத்திடம் சரியாக பணம் கட்டாமல் சீசிங் செய்யப்பட்டுள்ளது. இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட கணேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-முகமது சாதிக் அலி.

Comments