மேலூரில் SDPI கட்சியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!
மதுரை மாவட்டம், மேலூரில் அனைத்து சமுதாய மக்களின் தேவைக்காக SDPI கட்சியின் சார்பில் அவசர சிகிச்சை ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
SDPI கட்சி தமிழ்நாடு முழுவதும் இதுவரை 29 அவசர சிகிச்சை ஊர்திகளை இயக்கி, அனைத்து சமுதாய மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று (14/12/2021) மேலூர் JSR திருமண மண்டபத்தில் 30வது அவசர சிகிச்சை ஊர்தி அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, SDPI கட்சியின் மேலூர் தொகுதித் தலைவர் முகமது தாகா தலைமை ஏற்றார். மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அவசர சிகிச்சை ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், சமூக மருத்துவர் கணேசன், விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன், வணிகர் சங்கத்தின் முத்துக் கிருட்டிணன், துணி மற்றும் ஆயத்த ஆடைகள் சங்கத் தலைவர் சந்திரசேகர், மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் மணவாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.மேலும், நிகழ்ச்சியில் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மேலூர் தொகுதி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜமாஅத்தார்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியை சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினர்.
பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பிலால்தீன், நிர்வாகிகள் ஜியாவுதீன், ஜாபர் சுல்த்தான், கமால் பாட்சா, அப்துர் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான், சீமான் சிக்கந்தர் மற்றும் மெஹர் தாஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். தொகுதி பொருளாளர் ரிசி கபூர் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி முடிவுற்றது.- மதுரை வெண்புலி.
Comments