108 ஆம்புலன்சில் குவா குவா..!! ஊழியர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..!!!

   -MMH 

      அன்னூர் கதவுகரை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த 108 ஊழியர்களுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்.

அன்னூர் கதவுகரை பகுதியை சேர்ந்தவர் முருகன் சாமி இவரது மனைவி அபர்ணா இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அபர்ணா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திடீரென்று நேற்று அதிகாலை அபர்ணாவுக்கு பிரசவ வலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அபர்ணாவுக்கு பிரசவ வலி அதிகமாக உடனே ஆம்புலன்ஸ் வாகனம் ஓரம் கட்டப்பட்டு மருத்துவ உதவியாளர் தனபால் மற்றும் ஓட்டுநர் இருவரும் இணைந்து  அபர்னாவுக்கு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்தனர் இதில் அழகிய ஆண்குழந்தை அபர்ணாவுக்கு பிறந்தது. குழந்தையின் எடை 2 கிலோ 300 கிராம் உள்ளதாகும் தாயும் சேயும் இப்போது நலமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 108 ஊழியர்களின் இந்த அசாதாரண புத்தி கூர்மையால் செயலால் இரு உயிர்கள் காப்பாற்றப் பட்டது மக்களிடையே பெரும் பாராட்டை குவித்து வருகிறது.

-சாதிக் அலி.

Comments