கொரோனா சிகிச்சைக்காக கோவையில் 11 ஆயிரம் படுக்கைகள் தயார்!!

   -MMH 

   கோவையில் ள கொரோனா சிகிச்சை படுக்கை வசதிகளை நேற்றிரவு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கோவை அரசு மருத்துவமனைகளில், 4,272 சாதாரண படுக்கைகள், 1,136 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சை பிரிவில், 113 படுக்கை வசதிகள் என, மொத்தம், 5,521 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 1,703 சாதாரண படுக்கைகள், 2,359 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சை பிரிவில், 401 படுக்கை வசதிகள் என, மொத்தம், 4,365 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.கொடிசியாவில், 24 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மொத்தம், 665 படுக்கைகள் உள்ளன. மாவட்டத்தில், 11 ஆயிரத்து, 525 படுக்கைள் வசதிகள் கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 129 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலன், 31 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும், 3,087 ஆக்சிஜன் உருளைகள் என, அனைத்து ஆக்சிஜன் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன என அவர் கூறினார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments