சிங்கம்புணரி ஒன்றியத்தில் கனமழைக்கு 2 வீடுகள் இடிந்தன! அதிகாரிகள் ஆய்வு!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்தக் கனமழையால் சிங்கம்புணரி ஒன்றியம், மு.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட எஸ்.கோவில்பட்டி கிராமத்தில் ஒயப்பன் மனைவி சின்னம்மாள் என்பவருக்குச் சொந்தமான, மண் சுவரால் ஆன கூரை வீட்டின் கிழக்குப் புற சுவர் நேற்று காலை முழுவதுமாக இடிந்து விழுந்தது. இது குறித்த தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ராஜா முகமது, வட சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் மற்றும் மு.சூரக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடிந்த வீட்டிற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் 'பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்' என வருவாய் ஆய்வாளர் கூறினார். அதே போன்று காட்டுக்கருப்பன்பட்டியில் பெரியான்பிள்ளை மகன் கோபி என்பவருக்கு சொந்தமான ஓட்டுவீட்டின் கிழக்கு பக்க மண்சுவர் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்திலும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏதும் இல்லை.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments