ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக கோவை ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரம்!

    -MMH 

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மாத தொடக்கத்தில் இருந்து சற்று குறைந்து வந்தது. இருப்பினும் சென்னை, கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை விட கூடுதலாக இருக்கிறது. இது தவிர தற்போது ஒமைக்ரான் பரவலும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்கின்றனர். இதன் காரணமாக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் அதிகளவில் பொதுமக்களின் கூட்டம் காணப்படுகிறது.

கோவையில் இருந்து ரெயில் மூலம் வெளியூர் செல்லும் நபர்கள் மற்றும் வெளியூரில் இருந்து ரெயில் மூலம் கோவைக்கு வரும் நபர்களுக்கு ரெயில் நிலைய வளாகத்தில் சுகாதாரத்துறையினர் சார்பில் கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

"கோவையில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள், வெளியூரில் இருந்து கோவை வரும் பயணிகளுக்கு ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு தினமும் 1000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

அதன் முடிவுகள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். இது தவிர பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனரா? என்பது குறித்தும் கண்காணிக்கப்படுகிறது". இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments