பெரியார் சிலை அவமதிப்பு தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

   -MMH 

    தமிழகத்தில் தொடர்ந்து  பதட்டமான சூழலை ஏற்படுத்த திட்டமிட்டு சிறுபான்மை மக்கள் கோபத்தை தூண்ட செய்வது, தந்தை பெரியாரை இழிவு படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டுவது அவரை கொச்சைப்படுத்தி பேசி திராவிட பாரம்பரியத்தை கேவல படுத்துவதும் வாடிக்கையாக கொண்டுள்ள காவி பயங்கர வாதிகளை மனிதநேய மக்கள் கட்சி வண்மையாக கண்டிகிறது.

அதன் தொடர்ச்சியாக கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் சிலையின் மேல் காவி சாயம் பூசி  செருப்பு மாலை அணிவித்து ஈன செயலை  செய்திருக்கும் பிரிவினைவாதிகள் இனிமேலும்  இது மாதிரி நடக்காதவாறு காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது தந்தை பெரியார் அறிஞர் அண்ணா போற்றி வார்த்து எடுத்த மண் இதில் சங்பரிவார பாசிசம் எண்ணம் நிறைவேறாது என்பதையும் அவர்களுக்கு தெளிவாக எச்சரிக்கை விடுத்தவண்ணம் இந்த தருணத்தில் தெளிவான கொள்கை கொண்ட பெரியார் தொண்டர்கள் பொறுமையாக இருக்கவேண்டும்  என்பதையும் கேட்டுக்கொள்கிறேன் என்று மனிதநேய மக்கள் கட்சியின் கோவை மாவட்டசெயலாளர் ஜெம்பாபு கூறினார் !!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Comments