பொது சாலை... குடியிருப்பு வாசியால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக எழும் புகார்கள்...!!! சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழும் கோரிக்கை..!!!

   -MMH 

   கோவை மாவட்டம் 22வது வார்டுக்கு உட்பட்ட டீச்சர்ஸ் காலனி சக்தி விநாயகர் நகர் ( phase II ) பகுதியில் கிட்டத்தட்ட 40 குடும்பத்துக்கும் மேல் வசித்து வருகின்றனர். 

இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசி ஒருவர் பொது சாலையை 8 அடி வரை ஆக்கிரமிப்பு செய்து தன் வீட்டின் வெளி வாசலோடு சேர்த்து பொது சாலையை 8 அடி வரை காரை பூசி , அருகாமையில் மினி கார்டன் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வருகின்றனர். 

இந்த ஆக்கிரமிப்பின் காரணத்தினால்  அந்த குடியிருப்பு வாசியின் வீட்டை கடந்து செல்லும் மற்ற குடியிருப்புவாசிகளின் வாகனங்கள் சற்று சிரமத்துக்கு உள்ளாகி சாலையை கடக்க வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், அரசுத் துறையின் அதிகாரிகள் ஆகியோர் இடத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 

ஆகவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த குடியிருப்பு வாசியின்  ஆக்கிரமிப்பை அகற்றி பொது சாலையை மீட்டுத் தருமாறும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

-சாதிக் அலி.

Comments