பொள்ளாச்சி உணவகங்களில் அரசின் கட்டுப்பாடுகள் அமல்..!!

   -MMH 

   தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மேலும், ஓமிக்ரான் பரவலும் ஆங்காங்கே உள்ளது. இதனை தடுக்கும் வகையில், தமிழக அரசு நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இதன்படி,  உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடலாம். சினிமா தியேட்டர்களில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி ஆகியவை அடங்கும். இவை நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதன்படி நேற்று பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை பகுதிகளில் உள்ள உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களே அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டனர். 

இதேபோல், சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அரசின் விதிமுறைகள் ஓட்டல்கள், தியேட்டர்களில் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்

பொள்ளாச்சி.

Comments