கோவை கொடிசியா வளாகத்தில் சிறப்பு வார்டுகள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!!

    -MMH 
     மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் சிறப்பு வார்டுகள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!!

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவல் மற்றும் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் மீண்டும் படுக்கைகள் அமைத்து வார்டு ஏற்பாடு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதே போல கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் வார்டு அமைப்பது குறித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்திலும் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments