பொள்ளாச்சியில் மீண்டும் தன் சேவையை தொடங்கிய நேதாஜி இளைஞர் பேரவை..!!

   -MMH 

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்ற மக்களுக்கு மீண்டும் தனது சேவையை செம்மையே செய்ய தொடங்கி உள்ளது நேதாஜி இளைஞர் பேரவை.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட (09.01.2022) முழு ஊரடங்கு காரணமாக பொள்ளாச்சி பகுதியைச் சுற்றியுள்ள ஆதரவற்றவர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பாக சுமார் 250பேருக்கு மதிய உணவு மற்றும் முக கவசம், தண்ணீர் வழங்கப்பட்டது.

சேவையை நமது பொள்ளாச்சி வட்டாட்சியர் திரு.அரசு குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் பேரவைத் தலைவர் அண்ணன் வெள்ளை நடராஜ் கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி பேரவை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சுப்பிரமணி,விக்னேஷ், யது கிருஷ்ணன்,முத்தமிழ்,மணிகண்டன், நவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு உணவு வழங்கினர்.

ஒவ்வொரு முழு ஊரடங்கின் போதும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவையின் உணவு வழங்கும் பணி தொடரும் என தலைவர் வெள்ளை நடராஜ் தெரிவித்தார்.

மக்கள் முககவசம் அணிய வேண்டும்,அரசு கூறும் அறிவுரைகள் கேட்டு கொரோனாவை விரட்ட வேண்டும் என நமது நாளைய வரலாறு செய்திக்கு அளித்த பேட்டியில் அறிவுறுத்தி உள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments