கோவையில் பெரியார் சிலையை அவமதித்த சமூகவிரோதிகள் !!!

    கோவை வெள்ளலூரில் தந்தை பெரியார் அவர்களின் சிலை அவமரியாதை செய்யப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான சமூக விரோத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். 

கோவையில் தொடர்ந்து சங்பரிவார சக்திகள் இதைப்போன்ற வன்முறைகளை அரங்கேற்றிகொண்டே இருக்கிறார்கள்,  

இதற்கு முன்பும் கோவையில் தந்தைபெரியார் சிலை அவமதிக்கப்பட்டு இருக்கிறது. கோவையில் எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட நினைக்கும் பாசிஸ பயங்கரவாதிகளின் கொட்டத்தை தமிழகஅரசு உடனடியாக இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப்  கோவை.

Comments